ETV Bharat / state

தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 184 இடங்களில் சேர்க்கை: ஏஐசிடிஇ அனுமதி! - undefined

aicte
aicte
author img

By

Published : Jul 28, 2020, 8:08 AM IST

Updated : Jul 28, 2020, 10:15 AM IST

08:00 July 28

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவையும் அடங்கும். மொத்தமுள்ள 500 கல்லூரிகளில், இந்தக் கல்வியாண்டில்  2 லட்சத்து 63 ஆயிரத்து 184 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்(ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.  

தமிழ்நாட்டில் புதிதாக 3 பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும் , அவற்றில் ஆயிரத்து 80 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பி.ஆர்க்., கட்டடக்கலை இளங்கலை பட்டப்படிப்பில், 22 கல்லூரிகளில் 1,520 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மூலம் அளிக்கப்படும் பி.ஆர்க்., அப்ளைடு ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட் (applied arts and crafts), வரைகலை (design), பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஹோட்டல் மேலாண்மை மற்றும் சமையல் கலை, மேலாண்மை பட்டப்படிப்புகள், எம்.சி.ஏ., பார்மசி ஆகிய பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான அனுமதியை, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் பட்டய படிப்புகளில் (diploma) 496 கல்வி நிறுவனங்களில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 371 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக்., முதுகலை பட்டப் படிப்புகளில், 358 கல்வி நிறுவனங்களில் 30 ஆயிரத்து 306 இடங்களிலும், எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் 350 கல்வி நிறுவனங்களில், 29 ஆயிரத்து 786 இடங்களிலும், எம்.சி.ஏ., பட்டப்படிப்பில், 183 கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரத்து 606 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதுகலை தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளில், ஏற்கனவே உள்ள 618 கல்வி நிறுவனங்களில், 71,530 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு புதிதாக எம்.இ., பட்டப் படிப்பில் ஒரு கல்வி நிறுவனத்தில், 12 இடங்களுக்கும், எம்.பி.ஏ., எனப்படும் மேலாண்மை படிப்பில் ஒரு கல்வி நிறுவனத்தில் 60 இடங்களுக்கும் அனுமதி அளித்து ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.

அதேபோன்று இளங்கலை தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளில் ஏற்கனவே 516 கல்வி நிறுவனங்களில், 2 லட்சத்து 66 ஆயிரத்து 14 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்தாண்டு புதிதாக இளங்கலை பொறியியல் படிப்பில், மூன்று புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு  ஆயிரத்து 80 மாணவர்களை சேர்ப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பப் படிப்பினை வழங்கும் 1,240 கல்வி நிறுவனங்களில், 5 லட்சத்து 23 ஆயிரத்து 67 மாணவர்கள் சேர்ப்பதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில், மாணவர்கள் சேர்ப்பதற்கு பல்கலைக்கழகத்தின் இசைவைப் பெற வேண்டும். 

அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் கல்லூரிகள் விண்ணப்பம் செய்யும். கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்.  

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தாண்டு ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குவதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகஸ்ட் 15 வரை கால நிர்ணயம் செய்துள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் பெரும்பாலானவை விண்ணப்பித்துள்ளனர். அவற்றின் அடிப்படையில், இந்தாண்டு ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை பிரிவுகளில், எவ்வளவு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்ற விபரத்தை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் வெளியிடும். 

அதன் அடிப்படையில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அனுமதியை மட்டும் பெற்றால் போதுமானது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் 2019 20 ஆம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் 10 ஆயிரத்து 992 கல்வி நிறுவனங்களில் 32 லட்சத்து 9 ஆயிரத்து 703 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தது.

2020- 21 ஆம் கல்வி ஆண்டில் 9,691 கல்லூரிகளில் 30 லட்சத்து 88 ஆயிரத்து 512 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. வந்து புதிதாக கட்டிடக்கலை மற்றும் பார்மசி கல்வி நிறுவனங்களும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக 50 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருந்த கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை 30 சதவீதமாக குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jul 28, 2020, 10:15 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.