ETV Bharat / state

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இண்டாவது நாளாக போக்குவரத்துதுறை அமைச்சர் தலைமையில் தொடக்கம் - அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில்

போக்குவரத்துறை 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை இண்டாவது நாளாக அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இண்டாவது நாளாக போக்குவரத்துதுறை அமைச்சர் தலைமையில் தொடக்கம்

author img

By

Published : Aug 24, 2022, 2:25 PM IST

சென்னை: குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொர்பாக 7வது கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று தொடங்கி நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக வரவழைத்து, தனி அறையில் அமைச்சர் சந்தித்தார். இறுதியாக கலந்துரையாடல் அரங்கத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் சில முக்கிய கோரிக்கைகள் நிறைவேறாமல் இருந்ததால் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இரண்டாவது நாளாக 14வது ஊதிய ஒப்பந்த ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இண்டாவது நாளாக போக்குவரத்துதுறை அமைச்சர் தலைமையில் தொடக்கம்

இப்பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், நிதி துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கங்கள் பங்கேற்று உள்ளன. ஏற்கனவே ஆறு கட்டங்களா நடந்த பேச்சு வார்த்தையில் 90 சதவீத பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பே மேட்ரிக்ஸ் முறையில் ஊதியம் வழங்குதல், போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை மூன்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த வேண்டும் அதில் மாற்றம் வேண்டாம், உள்ளிட்டவை பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகளாக உள்ளது.

இதையும் படிங்க: போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.