ETV Bharat / state

திருவிழாக்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு - எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு . 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், திருவிழா காலங்களில் உரிய பாதுகாப்பு அளிக்காததைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

thanjavur-chariot-festival-accident-5-lakh-relief-not-enough-25-lakh-to-be-provided-said-edappadiதஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து: 5 லட்சம் நிவாரணம் போதாது; 25 லட்சம் வழங்க வேண்டும் - எடப்பாடி கோரிக்கை  OR திருவிழாக்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததைக் கண்டித்து அதிமுக  வெளிநடப்பு - எடப்பாடி பழனிசாமி
thanjavur-chariot-festival-accident-5-lakh-relief-not-enough-25-lakh-to-be-provided-said-edappadi தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து: 5 லட்சம் நிவாரணம் போதாது; 25 லட்சம் வழங்க வேண்டும் - எடப்பாடி கோரிக்கை OR திருவிழாக்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு - எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Apr 27, 2022, 1:17 PM IST

சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோயிலில் இன்று (ஏப்.27) அதிகாலை நடந்த சித்திரை தேரோட்ட விழாவில் தேர் உயர் அழுத்த மின் கம்பி மீது மோதியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் தஞ்சாவூருக்கு செல்கிறார்.

மேலும், இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ள அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், சட்டப்பேரவையில் தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் ஏற்பட்ட தேர் விபத்து குறித்த கவன ஈர்ப்பு கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தேர் திருவிழா என்றால் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும், சாலைகள் முழுமையாகச் செப்பனிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிகிறது.

திருவிழாக்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு - எடப்பாடி பழனிசாமி

எனவே இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு 5 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது. இது போதாது 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அதிமுக சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் வழங்கவும், காயமடைந்த 15 பேருக்கு 25,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் உரிய பாதுகாப்பு அளிக்காததைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் விபத்து - மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவு - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.