ETV Bharat / state

காமராஜர் பிறந்தநாளில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடக்கம்! - news about actor vijay

முன்னாள் முதலமைச்சர் காமராஜரை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான நாளை ஜூலை 15 ஆம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்போவதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்

தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்போவதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்

author img

By

Published : Jul 14, 2023, 8:23 AM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் காமராஜரைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான நாளை (ஜூலை 15) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்போவதாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்து உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், ‘விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பின் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் குருதி கொடை, விழியகம் எனப்படும் கண் தானத் திட்டம், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி வழங்கும் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த ஜூன் 17 அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வைத்து 2022 - 2023ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையை விஜய் வழங்கினார். அந்த விழா மேடையில் பேசிய அவர், ‘அசுரன்’ படத்தில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இடம் பெற்றிருந்த வசனத்தை மாணாவர்கள் மத்தியில் கூறி இருந்தார்.

அது மட்டுமல்லாமல், பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா ஜூலை 15ஆம் தேதி வருவதையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளை பிரமாண்டமான முறையில் கொண்டாட வேண்டும் என பல முன்னேற்பாடுகள் ஆரவாரமாக நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தற்போது காமராஜர் பிறந்தநாளில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் போவதாகவும், அந்த நாளில் மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப் போவதாகவும், மேலும், காமராஜர் அவர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்பட போவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிப்பு; பொதுமக்கள் பார்வைக்காக ஜூலை 15ஆம் தேதி திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.