ETV Bharat / state

தேனாம்பேட்டையில் 11 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு - கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Teynampet crossed 11 thousands corona positive cases

author img

By

Published : Aug 4, 2020, 7:07 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக கோடம்பாக்கம், அண்ணா நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்திருந்த நிலையில், தற்போது தேனாம்பேட்டையிலும் 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 985 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 86 விழுக்காடு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மணலி மண்டலத்தில் 92 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் இரண்டாயிரத்து 176 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கோடம்பாக்கம் - 11,940 பேர்

அண்ணா நகர் - 11,758 பேர்

ராயபுரம் - 11,422 பேர்

தேனாம்பேட்டை - 11,074 பேர்

தண்டையார்பேட்டை - 9,732 பேர்

திரு.வி.க. நகர் - 8,296 பேர்

அடையாறு - 7,347 பேர்

வளசரவாக்கம் - 5,821 பேர்

அம்பத்தூர் - 6,181 பேர்

திருவொற்றியூர் - 3,801 பேர்

மாதவரம் - 3,467 பேர்

ஆலந்தூர் - 3,329 பேர்

சோழிங்கநல்லூர் - 2,472 பேர்

பெருங்குடி - 3,033 பேர்

மணலி - 1,747 பேர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.