சென்னை: 'தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை அச்சிடும் டெண்டர், முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு 90 விழுக்காடும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிறுவனங்களின் எதிர்ப்புக் காரணமாக, பிறமாநில நிறுவனங்களுக்கு இந்த முறை 10 விழுக்காடு பணிகளும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசுப்பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள், வழக்கமாகத் தமிழ்நாடு மட்டுமில்லாமல், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் ஆர்டர் கொடுப்பது வழக்கம். ஆனால், தமிழ்நாட்டில் சிவகாசி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிக அளவில் அச்சக நிறுவனங்கள் இருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் தங்களுக்கே பணிகள் இல்லாத நேரத்தில், பிற மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி, முழுக்க முழுக்க அனைத்துப் பணிகளையும் தமிழ்நாடு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாடநூல் கழகத்திடம் கோரிக்கை வைத்திருந்தன. இந்த நிலையில், தற்போது அனைத்து ஆர்டர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும், கிட்டத்தட்ட ஆறு கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் 90 விழுக்காடு அளவிற்கு முடிவடைந்தும் இருக்கிறது.
மேலும், 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு மாவட்டங்களில் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' எனத் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும். - ஓபிஎஸ்