ETV Bharat / state

"சென்னை கடலோரப்பகுதிகளில் டெட்ராபாட் கட்டமைப்பு" - கூவத்தை சுத்தம் செய்யும் ஒரு திட்டம்!

சென்னையில் கடல் அரிப்பை தடுக்கவும், கூவத்திலிருந்து வரும் தண்ணீர் கழிமுகத்தில் தேங்காமல் இருக்கவும், டெட்ராபாட் மூலம் கடலில் விளிம்புகளில் சுவர் எழுப்பப்படுகிறது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறையினர் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : May 10, 2023, 5:06 PM IST

Tetrapod
திட்டம்

சென்னை: சென்னையில் கடல் அரிப்பைத் தடுக்கவும், கூவத்திலிருந்து வரும் தண்ணீர், கழிமுகத்தில் தேங்காமல் சுத்தம் செய்யவும், டெட்ராபாட் கட்டமைப்பை ஏற்படுத்த தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக சுமார் 2,000 கான்கிரீட் டெட்ராபாட் (Tetrapods) கற்களை சென்னை நேப்பியர் பாலம் அருகே குவித்து வைத்துள்ளது. அத்துடன் மேலும், 3,000 கான்கிரீட் டெட்ராபாட்களை கொண்டு வந்து, கடலுக்குள் ஒரு வேலி போல் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டமைப்பு, கடலின் உயர் அலைகளைக் குறைத்து, கடல் அரிப்பைத் தடுக்கும் என்றும், கூவம் ஆற்றிலிருந்து வரும் அசுத்த நீரை சீராக கடலில் செலுத்தி சுத்தப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

டெட்ராபாட் என்பது பெரிய அலைகளை சிதறடிக்கும் ஒரு கான்கிரீட் அமைப்பாகும். இது பேரலைகளால் கரைகள் சேதமடைவதை தடுக்கப் பயன்படுகிறது. இவை சுவர் போல கடலில் விளிம்புகளில் ஏற்படுத்தப்படும். அலைதாங்கிச் சுவர், அலை கரை, அணைகரை போன்ற கடலோர கட்டமைப்புகளை செயல்படுத்த இந்த டெட்ராபாட்கள் பயன்படுகின்றன. இவை, அலைகளின் விசையைச் சிதறடிப்பதற்கும், அவைகளுக்கு எதிராக அல்லாமல் தண்ணீர் சுற்றிப் பாய அனுமதிப்பதன் மூலம், இடையிடையே இடப்பெயர்ச்சியைக் குறைப்பதற்கும் பயன்படுகின்றன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "டெட்ராபாட் கட்டமைப்பு பெரிய அலைகளை தடுக்கக்கூடியது. இந்தப் பணியானது கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்படும். தற்போது 2,000 டெட்ராபாட்கள் உள்ளன. மேலும், 3,000 டெட்ராபாட்கள் கொண்டு வரப்படும். இது கூவத்தை சுத்தம் செய்யும் ஒரு திட்டமாகும்.

டெட்ராபாட் கட்டமைப்பு
டெட்ராபாட் கட்டமைப்பு

சிறிய அலையின்போது கூவத்தில் உள்ள தண்ணீரை சீராக கடலில் கலக்கச் செய்யும். பெரிய அலையின்போது கடலில் உள்ள நீர் கூவம் ஆற்றுக்குள் செல்லும். கடலில் தினந்தோறும் சிறிய அலைகளும், பெரிய அலைகளும் ஏற்படும். இதனை 'ஹை டைட்' மற்றும் 'லோ டைட்' என்று கூறுவார்கள். கடலில் தினந்தோறும் இதுபோன்ற அலைகள் ஏற்படும். இந்த இரு அலைகளும் ஏற்படுவதால், இயற்கையாகவே கூவத்தில் நீர் சுத்தமாகும். அதன் பிறகு கூவம் நீர் கடல் நீரை போலவே மாறிவிடும்" என்று கூறினார்.

இது குறித்து சென்னை மண்டல முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் வீரப்பன் கூறுகையில், "டெட்ராபாட் கான்கிரீட் என்பது கடல் அரிப்பைத் தடுப்பதற்கான ஒரு அமைப்பு. இதனை கடற்கரை ஓரமாக அடுக்கி வைப்பார்கள். ஒன்றன் மீதும் ஒன்றும் வைப்பார்கள். பெரிய அலைகள் கடற்கரை ஓரம் வரும்போது, அவற்றை டெட்ராபாட் கான்கிரீட் கற்கள் தடுக்கும். இதனால், கடலில் உள்ள மண் அரிக்கப்படாது.

அதேபோல், கடலும் கூவமும் சேருகின்ற கழிமுகத்தில், கூவத்தில் இருந்து வருகின்ற கழிவுநீர், மணலைக் கொண்டு வந்து சேர்த்து விடும். பிறகு, அந்த அடியில் உள்ள சேறு மற்றும் மண்ணை தனிவகை இயந்திரத்தைப் பயன்படுத்தி அகற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் தண்ணீர் உள்ளே போகும். இல்லையெனில், தண்ணீர் செல்லாது. இந்த சூழலில் டெட்ராபாட்டை அமைக்கும்போது, கடலில் இருந்து மண் வருவது குறைந்து விடும். கூவத்தில் உள்ள அசுத்தமான தண்ணீர், தடையின்றி கடலுக்குள் சென்று விடும். இந்த கட்டமைப்புக்கு பொதுப்பணித்துறை, சென்னை மெட்ரோ வாட்டர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணியைச் செய்யும்" என்று குறிப்பிட்டார். சென்னை மண்டலத்தின் தலைமை பொறியாளர் அசோகன் கூறுகையில், "இந்த திட்டமானது கடலரிப்பை தடுப்பதுடன் மழைக்காலங்களில் கூவத்தில் வரும் தண்ணீரை தேங்காமல் இருக்க பயன்படும். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன, விரைவில் முடிக்கப்படும்" என்றார்.

டெட்ராபாட் கட்டமைப்பு அமைக்கும் பணி
டெட்ராபாட் கட்டமைப்பு அமைக்கும் பணி

இதையும் படிங்க: 'திராவிட மாடல் எனக் கூறிக்கொள்ளும் அரசு சுகாதார உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.