ETV Bharat / state

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி - உஷார் நிலையில் தமிழ்நாடு! - போலீஸ் குவிப்பு

சென்னை: தமிழ்நாட்டிற்குள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

terrorists
author img

By

Published : Aug 24, 2019, 4:19 AM IST

தமிழ்நாட்டிற்குள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் அவர்கள் ஆறு பேரும் கோவையில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும், மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் என்றும் தகவல் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோவை மாநகர் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள ரயில் நிலையம், கோவில்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் காவல்துறை அலர்ட்

காவல்துறையினர் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் இதுபற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்களிடையே இச்சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தலைநகர் சென்னையில் முக்கிய இடங்களான சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், எல்ஐசி, தி. நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சேலத்தில் ரயில்வே காவல்துறை கெடுபிடி

சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர், சேலம் மாநகர காவல்துறையினர் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தீவிர சோதனைக்கு பிறகே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சேலம் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் இளவரசி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் அரவிந்த் குமார் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோப்ப நாய் உதவியுடன் ரயில் பெட்டிகளில் சோதனை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் தீவிர ரோந்து

வேளாங்கண்ணி பேராலயத்தில் போலீஸ் குவிப்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட மூன்று டிஎஸ்பிகள் தலைமையிலான 170 சிறப்பு அதிரடிப் படை காவலர்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள், 108 காவலர்கள் ஆகியோர் அங்குள்ள தனியார் மற்றும் பேராலய விடுதிகளிலும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் சந்தேகத்திற்குறிய நபர்கள் குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரும் 29ஆம் தேதி புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் ஆண்டு திருவிழா நடைபெற உள்ள நிலையில், அங்கு பயங்கரவாதிகள் இலங்கை தாக்குதலை போன்று சதித்திட்டம் தீட்டக்கூடும் என்ற அடிப்படையில் அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் 10 ரவுடிகள் அதிரடி கைது

திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதோடு, சட்ட ஒருங்கை பாதுகாக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்.

கரூரில் வாகன சோதனை தீவிரம்

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி காரணமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் நகரின் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூரின் முக்கிய சந்திப்பு சாலைகளான திருச்சி நெடுஞ்சாலை, கோவை நெடுஞ்சாலை, சேலம் நெடுஞ்சாலை பகுதிகளில் தடுப்பு அமைத்து வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் ரோந்து

புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் மும்பாலை சோதனைச் சாவடியில் கடலோரப் பாதுகாப்பு குழு ஆய்வாளர் அன்னலெட்சுமி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து கடலோர மீனவ கிராமங்களிலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குறிய நபர்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க கடலோர பாதுகாப்பு குழும இலவச தொலைபேசி எண் 1093-க்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடும் கெடுபிடி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலில் உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் முத்திரை சின்னமாக விளங்கக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக்கோயிலுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்ததன் பேரில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து கூடுதலாக துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் குழு மூலம் தீவிர சோதனையும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்கள் கண்காணிக்கபட்டு சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

குன்னுார் ராணுவ முகாம்கள், மலை ரயில்களில் சோதனை

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் ராணுவ முகாம்கள் மற்றும் மலை ரயில்களில் முழு சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அம்மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளான குன்னுார் ராணுவ முகாம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிவிரைவு படை போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று சிம்ஸ்பார்க், லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் மற்றும் நீலகிரி நுழைவாயில்கள், மலை ரயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தொடர் விடுமுறை காரணமாக உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களிலும், வெலிங்டன் ராணுவ மையம், அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்ட எல்லைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு

ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அறிவுத்தலின் பேரில் மாவட்ட எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு வேளைக்கு 28 பேர் கொண்ட காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே ஐஜி அருள்ஜோதி தெரிவித்துள்ளார். அனைத்து பயணிகளும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

வெடிமருந்து குடோன்களுக்கு சீல்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அனுமதியுடன் இயங்கிவரும் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் டெட்டினேட்டர் எனப்படும் வெடிமருந்து பொருட்களை விற்பனை செய்யும் குடோன்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். இது தொடர்பாக உரிய அனுமதி அளிக்கப்பட்ட பிறகே குடோனில் இருந்து எந்த ஒரு பொருளையும் வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.