ETV Bharat / state

வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்தவர் கைது!

சென்னை: குமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதி காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்தவரை கியூ பிரிவு காவலர்கள் நேற்றிரவு பெங்களூரில் வைத்து கைது செய்தனர்.

Terrorist arrest  எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு  எஸ்ஐ வில்சன் கொலையாளிகள்  துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது  எஸ்ஐ வில்சன் துப்பாக்கி  terrorist arrested in Bangalore who link with si wilson murder
வில்சனை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்தவர் கைது
author img

By

Published : Jan 13, 2020, 9:52 PM IST

தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியான களியாக்காவிளை அருகேயுள்ள படந்தாலூமூடு சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் வில்சன் ஜனவரி 8ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எஸ்ஐ கொலையில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க காவல்துறை தரப்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதன்பின்னர் தமிழ்நாடு கேரளா எல்லையில் அக்கொலையில் தொடர்புடைய நான்குபேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்றிரவு வில்சன் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்த இஜாஸ் பாட்சாவை கியூ பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.

ஆம்னிபஸ் டிரைவரான இவர், கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொலைசெய்த தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோருக்கு மும்பையிலிருந்து துப்பாக்கிகளை வாங்கி சப்ளை செய்தததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் சப்ளை செய்த மூன்று துப்பாக்கிகளை கைப்பற்றிய காவலர்கள் மீதமுள்ள ஒரு துப்பாக்கியை தற்போது தீவிரமாக தேடிவருகின்றனர்.

அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த வழக்கு என இருவழக்குகளில் ஆஜராகாமல் இருந்த காஜா மொய்தீன், நவாஸ், அப்துல் சமீம் ஆகிய மூவரை தமிழ்நாடு காவலர்கள் தீவிரமாக தேடிவந்தனர். கடந்த இரண்டு மாதமாக இவர்களைப்பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையல், இவர்களுடன் தொடர்பில் இருந்த இருவரை பிடித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், காஜா மொய்தீன் உள்பட மூவர் தப்பிச்செல்வதற்கு உதவி செய்த முகமத் அனிப் கான், இம்ரான் கான், முகமது சையத் ஆகியோர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதன் பின்னர் பெங்களூரு விரைந்த கியூ பிரிவு காவலர்கள் அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் மூன்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததும், போலியான ஆவணங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகளை சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதன்பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் களியாக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளரைச் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிவர்களின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டது. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து, அந்தக்கொலையாளி அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலைவழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த காஜாமொய்தீன் உள்பட மூவரை டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை கைதுசெய்தது. இதன்பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணயின் அடிப்படையில் பெங்களூரு கலாசிப்பாளையத்தில் பதுங்கியிருந்த இவர்களின் கூட்டாளியான இஜாஸ் பாட்சாவை தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும், இவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரையில் 9 பயங்கரவாதிகளை தமிழ்நாடு கியூ பிரிவு காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்!

Intro:Body:பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்பத்தூர் இந்து முன்னனி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த வழக்கு என இரு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த காஜா மொய்தீன் உட்பட மூன்று பேர்களை ,நவாஸ் ,அப்துல் சமீம் தமிழக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் .

பின்னர் தலைமறைவாக இருந்த இவர்கள் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கையால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த இரண்டு மாத காலமாக இவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி 2 நபர்களை பிடித்து சென்னைக்கு வெளியே வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையை அடுத்து பெங்களூரை சேர்ந்த முகமத் அனிப் கான், இம்ரான் கான், முகமது சையத் ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.மேலும் இவர்கள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதை அறிந்த கியூ போலீசார் விரைந்து அவர்களை கைது செய்தனர்..பின்னர் கியூ பிரிவு போலீசார் இவர்கள் மூன்று பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் காஜா மொய்தீன், நவாஸ், சமீம் ஆகிய 3 பேரும் தப்பிப்பதற்கு உதவி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கி பல்வேறு மாநிலத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.பின்னர் இவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு உதவி புரிந்ததும் தெரியவந்தது.இவர்களிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட போலி சிம் கார்டுகள் மற்றும் 3 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் இவர்கள் மூன்று பேரையும் கியூ பிரிவு போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த உதவி ஆய்வாளர் வில்சணை இரண்டு நபர்கள் கத்தியால் தாக்கியும்,துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பித்து சென்றனர். மேலும் தப்பித்து சென்ற கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டனர். அந்த கொலையாளி அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் என்பது தெரியவந்தது.மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காஜா மொய்தீன் உட்பட 3பேரை டெல்லியில் தமிழக போலீசார் கைது செய்தனர்.பின்னர் உதவி ஆய்வாளரின் உடலில் துளைத்த குண்டும் நேற்று முந்தினம் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான்,அலிப் கான் ஆகியோரிடமிருந்து கைப்பற்ற துப்பாக்கியில் உள்ள குண்டும் ஒரே ரகம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் கியூ பிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்த 4பேரையும் விசாரணைக்காக போலீஸ் காவலில் 10 நாட்கள் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெங்களூர் கலாசிப்பாளையத்தில் பதுங்கி இருந்த கூட்டாளியான இஜாஸ் பாட்சாவை தமிழக கியூ பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர். இதுவரையில் 9 பயங்கரவாதிகளை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.