சென்னை: எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 15வயது சிறுவன், அசோக் நகரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாண்டிச்சேரியில் படித்து வந்த சிறுவன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்து, இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.
பள்ளியில் சிறுவனின் மொழி மற்றும் பாவனையை 10க்கும் மேற்பட்ட சக மாணவர்கள் கிண்டல் செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் சிறுவனுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், சிறுவனை சக மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து சிறுவன் அளித்த தகவலின் பேரில், சிறுவனின் தந்தை ஆசிரியர்களிடம் புகார் செய்ததால், சக மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந் சக மாணவர்கள் சிறுவன் வெளியே வந்த பிறகு அவனை தாக்கி அரை நிர்வாணமாக்கி உள்ளனர். பின்னர் அவனது பிறப்புறுப்பில் தாக்கி, சக மாணவர்கள் ஈடுபட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
காயமடைந்த சிறுவன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் தொந்தரவில் ஈடுபட்டதாக மாணவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாணவனின் தந்தை தன்னிடம் பேசியதாக பாடகி சின்மயி ட்விட்டரில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளார். மாணவனை தாக்கிய சக மாணவர்கள், அவரை கழிவறைக்கு சென்று ஓரி உறவில் ஈடுபட வற்புறத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். சிறுவனின் கையில் கத்தியை கொடுத்து தற்கொலை செய்து கொள்ளுமாறு மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தெரிய வந்த அந்த சிறுவனின் தாயார் பள்ளிக்கு சென்று கிட்டத்தட்ட அந்த சிறுவர்களிடம் கெஞ்சியதாகவும் குறிப்பிட்டுள்ள சின்மயி, தாயாரின் முன் நல்லவர்கள் போல நடித்த சிறுவர்கள் அவர் சென்ற பின்னர், பெற்ற தாய் குறித்து சிறுவனிடம் அவதூறாக பேசினர் என குற்றம் சாட்டுகிறார்.
இத்துடன் அச்சில் ஏற்ற முடியாத சில கொடுமைகளையும் சிறுவர்கள் செய்துள்ளதாக குற்றம் சாட்டும் சின்மயி, பள்ளி செல்லும் சிறுவர்கள் பாதுகாப்பாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இருளர் பெண்கள் பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரியின் ஜாமீன் மறுப்பு