ETV Bharat / state

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தால் கைது! - கோயில் நிலம் ஆக்கிரமிப்பு

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்ய வழிவகை செய்யும் புதிய மசோதா சட்டப்பேரவையில் இன்று (செப்.13) நிறைவேற்றப்பட்டது.

கோயில் நிலங்கள் ஆக்கிரமித்தால் கைது
கோயில் நிலங்கள் ஆக்கிரமித்தால் கைது
author img

By

Published : Sep 13, 2021, 6:54 PM IST

சென்னை: கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள், அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (செப்.13) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில், ”சமய நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருவதால், 1959ஆம் ஆண்டு 79b இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்து சமய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர் கடுமையான குற்றம் செய்தவராகக் கருதப்படுவார்.

புதிய மசோதா

ஆக்கிரமிப்பவர்களை ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எம்எல்ஏக்கள் ஓய்வூதிய உயர்வு மசோதா நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.