ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பு வகித்தபோது, அம்மாநிலத்தின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது.
அந்நகரத்தை தலைநகராக பொலிவூட்டும் பணிகளும் நடந்தது. அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தார். அவர் அமராவதி உள்பட மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்களை அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு தெலுங்கு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் பெண்கள், கல்லூரி மாணவர்கள் என 100க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 'ஒரே மாநிலம், ஒரே தலைநகர்', 'அமராவதி விவசாயிகளை காக்க வேண்டும்' என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசுகையில், “ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகர் கொண்டு வருவதாக சொல்லியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
அமராவதி விவசாயிகள் தங்கள் நிலங்களை தலைநகருக்காக கொடுத்த நிலையில் தற்போது மூன்று தலைநகர் உருவாக்குவது கண்டனத்துக்குரியது” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘சிஏஏ சல்லடைப் போன்றது’ - கனிமொழி எம்பி