ETV Bharat / state

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிக்கு சின்னத்திரை நடிகை எச்சரிக்கை - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளர் சினேகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி மீது சின்னத்திரை நடிகை காட்டம்!

author img

By

Published : Aug 8, 2022, 7:24 AM IST

சென்னை கடந்த 5 ஆம் தேதி, கவிஞரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சிநேகன், பாஜக பொறுப்பாளரும் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி மீது ஸ்னேஹம் அறக்கட்டளையில் பண மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக அண்ணாநகர் இல்லத்தில் ஜெயலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது , “எனது ஸ்னேஹம் அறக்கட்டளையில் அரசு ஆவணங்கள் மூலம் 2018 ஆம் ஆண்டு சமூக நலத்திட்ட உதவிகள் செய்து வந்துள்ளேன்.

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பேட்டி

திடீரென எனது அறக்கட்டளைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று, முகநூல் பக்கங்களில் ஆதாரங்கள் இல்லாத தகவல்களை சினேகன் பதிவிட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுகவுடன் நெருங்கி செயல்பட்டு வருகிறார் என்பதால்தான், சினேகன் கட்சியை எதிர் நோக்கத்தோடு பார்த்து வருகிறார்.

அறக்கட்டனை மீதான குற்றச்சாட்டை ஆதாரத்துடன் ஒரு வாரத்திற்குள் வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்னேஹம் அறக்கட்டளைய களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட, சினேகன் மீது புகார் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'நான் நிஜ வாழ்க்கையில் நடிக்கமாட்டேன்..!' - கமல்ஹாசன் உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.