ETV Bharat / state

சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில் - Special Train to Chennai - Madurai

சென்னை: சென்னை எழும்பூர் - மதுரை இடையே சிறப்பு ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

tejas-special-train-to-chennai-madurai
tejas-special-train-to-chennai-madurai
author img

By

Published : Oct 11, 2020, 7:38 PM IST

சென்னை எழும்பூர் முதல் மதுரை இடையே சிறப்பு ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''சென்னை எழும்பூர் - மதுரை தேஜாஸ் சிறப்பு ரயில் எண் 02613 செவ்வாய்க் கிழமை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாள்களும் வரும் 13ஆம் தேதி முதல் செல்லவுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து 6:30 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளிக்கு காலை பத்து முப்பது மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 10:35 மணிக்கு புறப்பட்டு 11.53 மணிக்கு கொடைக்கானல் ரோடு சென்றடையும். அங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு 12.50 மணிக்கு மதுரை சந்திப்பு சென்றடையும்.

ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பயணிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரவேண்டும்.

மேலும் மதுரையில் இருந்து தேஜாஸ் ரயில் சென்னை வருவதற்கான நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 5,015 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.