ETV Bharat / state

ஆசிரியர்தேர்வு விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு - 300 விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை - 300 lectures

சென்னை: தொடக்கக் கல்வி ஆசிரியர் தேர்விற்கான விடைத்தாள் திருத்தும்போது முறைகேட்டில் ஈடுபட்ட 300 விரிவுரையாளர்கள் மீது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
author img

By

Published : May 14, 2019, 7:18 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வை 11,950 பேர் எழுதினர். இதில் வெறும் 455 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், அந்த விடைத்தாள்களை திருத்திய 300 விரிவுரையாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் உரிய விளக்கம் அளிக்கக்கோரி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 300 விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை
 மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அதிரடி
சென்னை, 

 தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு விடைத்தாள் திருத்தும் போது முறைகேட்டில் ஈடுபட்ட 300 விரிவுரையாளர்கள் மீது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு எழுதிய 11,950 பேரில் 455 பேர் மட்டுமே  பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் அரசுத் தேர்வுத்துறை கடந்த   ஜூன் 2018-ல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ , மாணவியர்களின் தேர்வு முடிவுகள்  அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்  மார்ச் 1 ந் தேதி  வெளியிட்டது.   
அதில்  ஆசிரியர் பட்டயப் பயிற்சித் தேர்வினை முதலாம் ஆண்டில் பயின்ற மாணவர்கள் 5,091 பேரும், 2ம் ஆண்டில் பயின்ற மாணவர்கள் 6,539 பேரும், ஏற்கனவே தேர்வினை எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் அரியர் உள்ள பாடத்தில் தனித்தேர்வர்களாக 5,420 பேரும் என 17,050 பேர் எழுதினர். 
இவர்களில்  2ம் ஆண்டு மற்றும் தனித்தேர்வர்கள் 11,950 மாணவர்கள் ஆவார்கள். அவர்களில் 455 மாணவர்கள் மட்டும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயச் சான்று பெறுவதற்கு தகுதிப் பெற்றுள்ளனர். 
மேலும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் செப்டம்பர் மாதம் முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிட தயார் செய்தனர். அப்பொழுது ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெறுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 50 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவரின் விடைத்தாளை திருத்திய விரிவுரையாளர்களை வரவைத்து விசாரணை நடத்தினர் .  அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிச்சி நிறுவனத்திற்கு  அரசு தேர்வுத் துறை பரிந்துரை செய்தது.
  அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே தீவிரமாக விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் 112 முதுநிலை விரிவுரையாளர்களும், 188 விரிவுரையாளர்களும் என 300 பேர் மீது  அரசு ஊழியர்கள் நடத்தை விதி 17 (பி)ன்  கீழ் நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.  
 அவர்கள்  விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்  அதிகாரி தெரிவித்தார்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு பொருத்தவரை பல ஆண்டுகளாக இதுபோன்ற தவறினை விரிவுரையாளர்கள் செய்து வந்த நிலையில் தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.