சென்னை: தாம்பரம் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்பு உள்ள இந்த தளத்தில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் போதையில் மதில் சுவர் ஏறி குதித்துள்ளார்.
அவரை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்து அருகில் உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் (கோகுல் 21), மேடவாக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. விமானப் படைத்தளம் அருகே உள்ள ஏரியில் குளிக்க வந்ததாகவும், அப்போது போதையில் தவறுதலாக விமானப்படை தளத்தில் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியைக் கொலை செய்த கணவரின் தண்டனைக்குறைப்பு