ETV Bharat / state

முழுக் கட்டணம் செலுத்த கல்லூரிகளைக் கட்டாயப்படுத்தக்கூடாது! - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்

சென்னை: கரோனா நெருக்கடிக்கு மத்தியில் மாணவர்களிடம் முழு கட்டணம் செலுத்தச் சொல்லி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்
author img

By

Published : May 6, 2021, 6:09 PM IST

கரோனா காலக்கட்டத்தில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட வழிமுறைகள் பின்வருமாறு:

  • மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.
  • கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எக்காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்கக்கூடாது. அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவுகளை கல்லூரிகள் திரும்பப் பெற வேண்டும்.
  • பேராசிரியர்களுக்குரிய மாத ஊதியத்தை உரிய கட்டத்தில் செலுத்த வேண்டும் எனவும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தற்போது இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில், பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை அவர்கள் வசிக்கக்கூடிய பகுதியிலுள்ள மற்ற கல்லூரிகளில் இணையதள வசதியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மருத்துவமனை ஊழியர்களை சந்தித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.