ETV Bharat / state

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்வது உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது.

author img

By

Published : Jun 28, 2022, 10:43 PM IST

பங்களிப்பு ஒய்வூதியம் ரத்து செய்ய ஆசிரியர்கள் 3 கட்டங்களாக போராட்டங்களை நடத்த முடிவு!

சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், “திமுக அரசு பதவி ஏற்றதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தீர்க்கப்படும் என ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால், மத்திய அரசு, ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. கடந்த முறை 6 மாதம் அகவிலைப்படி பறிக்கப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து எந்த விதமான உறுதியான முடிவையும் தமிழ்நாடு அரசு அறிவிக்கவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என நிதியமைச்சர் கூறுகிறார்.

ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 3 கட்டப் போராட்டங்களை நடத்த உள்ளோம். வருகிற ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், விழுப்புரம் என நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சென்னையில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்துவது என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு முடிவெடுத்துள்ளது.

திமுக அரசு எப்போதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பாதுகாவலனாக இருந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொகுப்பூதியத்தை நீக்கியும், ஆசிரியர்களின் நலனிற்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். அவரின் வழியில் வந்த அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

பள்ளிகளில் பல்வேறு நிகழ்வுகளில் ஆசிரியர்கள் தாக்கப்படுவதையும், பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். பணி செய்யும் இடங்களில் ஆசிரியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கும் வகையில் மருத்துவர்களைப் போல் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

ஆசிரியர்களின் அன்றாடக் கற்பித்தல் பணிகளை பாதிக்கும் வகையிலும், ஆசிரியர்களுக்குத் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் ஆசிரியர்களை நாள்தோறும் எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகள் மேற்கொள்ளக் கூறுவதையும், மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பதிவிடக் கூறுவதையும், பல விதமான தேவையற்ற தொடர் பயிற்சிகளில் கலந்து கொள்ளக் கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் நலன், கல்வி நலன், ஆசிரியர்கள் நலன் கருதி பணியில் முழுமையாக ஈடுபட அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையிலும் அக்னிபத் திட்டம்; கொந்தளிக்கும் ஆசிரியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.