ETV Bharat / state

ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - ஆசிரியர் ராஜகோபாலன்

சென்னை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : Jul 20, 2021, 1:03 PM IST

ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் வந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஜூன் 24ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

ராஜாகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி ஆர்.சுதா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மே 24ஆம் தேதி முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில் இந்திய தண்டனை சட்டம், போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மாணவி அளித்த புகாரில் 2015ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் என குறிப்பிட்டுள்ளதாகவும், அப்போது ஆன்லைன் வகுப்புகளே இல்லாத நிலையில் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பின்னர் எவ்வித வழக்குகளும் இல்லாத நிலையில், பாலியல் குற்றவாளி என குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளார்.

தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவி வழி தகவலின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். பெண்களை துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தெளிவற்று இருப்பதாக சுதா கூறியுள்ளார்.

ஜூன் 24 குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தாமதமாக ஜூலை 5ஆம் தேதிதான் வழங்கப்பட்ட்டதாகவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றே ஆவணங்களை வழங்காதது சட்டவிரோதம் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் - ஆர்.பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர், புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'பருவம் தவறிய மழையால் விளைபொருள்கள் வீணாவதைத் தடுக்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.