ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தநிலையில், பொதுமக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால், ஐந்துக்கும் குறைவான எண்ணிக்கையில் தேநீர் கடையில் தேநீர் அருந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி இன்று ஆறு மணிக்குள் அனைத்து தேநீர் கடைகளையும் மூடஉத்தரவிட்டுள்ளது.
அதேபோல், உணவுகளை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சொமாட்டோ போன்றவற்றையும் தடைவிதித்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காய்கறிகள், வீட்டு மளிகைப் பொருள்கள், மருந்துகள் போன்றவை டெலிவரி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண நிதி - அரசாணை வெளியீடு!