ETV Bharat / state

பொதுப்பணித்துறை ஒப்பந்தத்தில் வரி ஏய்ப்பு: மின் உபகரணங்கள் விநியோகம் செய்பவர் வீட்டில் சோதனை! - சென்னை செய்திகள்

பொதுப்பணித்துறை கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் பொதுப்பணித்துறை கட்டிடங்களுக்கு மின் உபகரணங்களை விநியோகம் செய்யும் அமித் என்பவர் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேகொண்டு வருகின்றனர்

பொதுப்பணித்துறை ஒப்பந்தத்தில் வரி ஏய்ப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 8:21 PM IST

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய கட்டுமான நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், இன்று காலை முதல் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான சுமார் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல் கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான கார்பெட் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை புரசைவாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அமித் என்பவர் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

அமித் என்பவர் தமிழ்நாட்டில் கட்டப்படும் பொதுப்பணித்துறை கட்டிடங்களுக்கு மின் உபயோகப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கக்கூடிய ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். சமீப காலமாக பொதுப்பணித்துறை சார்பாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு அதிகப்படியாக அமித் என்பவருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதில் முறைகேடு ஏதாவது நடந்துள்ளதா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனை குறித்து முழு விவரங்களும் சோதனைகள் முடிக்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கையாக வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடுக்குமாடி குடியிருப்பு.. 'வலிமை' பட பாணியில் செயின் பறிப்பு.. பலே நண்பர்கள் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.