ETV Bharat / state

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: இன்று விற்பனை அமோகம் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெறவுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் இன்றே மதுப்பிரியர்கள் மது வாங்கிச் செல்கின்றனர்.

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
author img

By

Published : Feb 21, 2022, 7:35 PM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நாளை (பிப்ரவரி 21) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனால், நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளன. இந்நிலையில் மது பாட்டில்களை வாங்க நேற்றும் இன்றும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் டாஸ்மாக்கின் வருமானம் இந்த இரண்டு நாள்களில் இரட்டிப்பாக இருந்தது என டாஸ்மாக் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் முடிந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மூன்று நாள்களுக்குப் பிறகு நேற்றும், இன்றும் திறக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கடைகள் திறந்தவுடன் வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியது. மாலை நேரங்களில் இதைவிட அதிகளவில் வியாபாரம் நடைபெற்றது என மதுக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடைகள் திறந்தவுடன் மதுப்பிரியர்கள் திரண்டுவந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும், சிலர் பெரிய கைப்பைகளைக் கொண்டுவந்து மதுவை வாங்கிச் சென்றனர். இதனால் சில கடைகளில் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்ததைக் காண முடிந்தது. இதனால் மாநராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலுள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகளவு மது விற்பனை நடந்தது.

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் வாயிலாக, பீர், மது வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய்க்கும், வார விடுமுறை நாள்களில் அதைவிட அதிகமாகவும் விற்பனை நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) நடந்தது.

இதனால், பாதுகாப்பு கருதி தேர்தல் நடக்கும் பகுதிகளில் இருந்து, 5 கி.மீ. சுற்றளவில் இருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், 17ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை மூன்று நாள்கள் மூடப்பட்டன.

அதே நேரம் கிராமப்புறங்கள், ஊராட்சிகள் உள்ளிட்டவைகளிலுள்ள அனைத்துக் கடைகளும் திறக்கப்படும் என்பதால் நகர்ப்புற மதுப்பிரியர்கள் அனைவரும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கிராமப்புறங்களுக்கு நாளை (பிப்ரவரி 22) படையெடுக்க தயாராகவுள்ளதாகவும் கூறுகின்றனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் அன்றும் எந்த அசம்பாவிதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அலுவலர்கள் கூறுகையில், "நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் இன்றே அமோகமான விற்பனை நடைபெற்றுள்ளது. சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடைபெற்றன” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திமுக கள்ள ஓட்டு விவகாரம் - மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி பாஜக மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.