தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப். 19ஆம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
இதனால், வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பிப்.17 காலை 10 மணி முதல் பிப். 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்.22ஆம் தேதி வரை 5 கி.மீ., சுற்றளவிலுள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் இயங்கக் கூடாது என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள மதுபானக் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தடையை மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 103 ஜெல்லடின் குச்சிகள் பறிமுதல்... ஒருவர் கைது