சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளதாலும், அந்தக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதாலும் கரோனோ வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் சென்னையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்கக்கோரி முருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், உலக சுகாதார நிறுவனம் குடிப்பழக்கத்தை ஒரு நாள்பட்ட நோயாக வகைப்படுத்தியுள்ள நிலையில், ஒரே நாளில் குடிப்பழக்கத்தை நிறுத்துவது விபரீதமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளையும் மூடினால் அது கரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டாம்: குமுறும் ‘குடி’மகன்கள்!