ETV Bharat / state

டாஸ்மாக் விவகாரம்:விதிமீறல் கடைகளை மூட மக்கள் சார்பில் மேல் முறையீடு செய்ய முடியும் - உயர் நீதிமன்றம்! - tamilnadu recent news

விதிகளை மீறி அமைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையீடு செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக்
tasmac
author img

By

Published : Jul 3, 2023, 1:23 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடாமல், விதிகள் படி அமைக்கப்பட்டிருந்த கடைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், உதவி ஆணையர் பரிந்துரையின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்குகின்றனர். தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்து 50 மீட்டர் தூரத்திலும், மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திலும் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்

ஆனால், இந்த விதிகளை முறையாகப் பின்பற்றாமல், தங்கள் விருப்பம் போல் மதுக்கடைகளை மூடியுள்ளதாகவும், விதிமீறல் கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்தது சட்டத்துக்கு புறம்பானது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படும் மதுக்கடைகளை மூடும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விதிமீறல் கடைகளை மூடக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் மேல் முறையீடு செய்ய முடியும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: மெர்க்கன்டைல் வங்கி செயல்பட எவ்வித சிக்கலும் இல்லை: தேசியப் பங்குச் சந்தைக்கு நிர்வாகம் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.