ETV Bharat / state

நீடிக்கும் இரு வேறு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள்: கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

மழை
மழை
author img

By

Published : Oct 15, 2021, 1:34 PM IST

மத்தியக் கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

மத்தியக் கிழக்கு, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று தென் கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய கேரளா - லட்சத்தீவு கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இன்றைய வானிலை

அக்டோபர் 15: இந்நிலையில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

மழை
மழை

அக்டோபர் 16: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 17: மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 18, 19: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மழை
மழை

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மே மாத்தூர் (கடலூர்) 7,

வேப்பூர் (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), காட்டுமயிலூர் (கடலூர்) தலா 5,

பாலக்கோடு (தருமபுரி), பையூர் (கிருஷ்ணகிரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), கலையநல்லூர் (கள்ளக்குறிச்சி) தலா 4,

கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), திருவாடானை (ராமநாதபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), மரக்காணம் (விழுப்புரம்) தலா 3,

கீரனூர் (புதுக்கோட்டை), விழுப்புரம் (விழுப்புரம்), பென்னாகரம் (தருமபுரி), மானாமதுரை (சிவகங்கை), திருச்செங்கோடு (நாமக்கல்), திருப்போரூர் (செங்கல்பட்டு), விருத்தாசலம் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), பேரூர் (கிருஷ்ணகிரி) பவானி (ஈரோடு), சித்தாறு (கன்னியாகுமரி), தொண்டி (ராமநாதபுரம்), சின்னக்கலர் (கோவை), பாபநாசம் (திருநெல்வேலி), வளவனூர் (விழுப்புரம்) தலா 2.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அக்டோபர் 15, 16: வங்கக்கடல் பகுதிகளான குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேபோல் தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: விஜயதசமி வித்யாரம்பம்; கல்வியை தொடங்கிய குழந்தைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.