சென்னை: சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 6 செ.மீ, சிற்றாறு (கன்னியாகுமரி) 5 செ.மீ, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), இரணியல் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) வலோகம் (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ, சுருளகோடு (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) தலா 2 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
ஏப்.06ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் ஓர் மேலடுக்குச் சுழற்சி உருவாகக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் ( ஏப்ரல் 5), நாளையும் ( ஏப்ரல் 6) சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 7) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இரிடியம் மோசடி; ராஜேந்திரனுக்கு நிபந்தனை ஜாமீன்!