ETV Bharat / state

கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை - Tamilnadu weather report today

அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை எச்சரிக்கை
மழை எச்சரிக்கை
author img

By

Published : Oct 7, 2020, 3:50 PM IST

சென்னை : வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெற்கு ஆந்திரக் கடலோரம் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தவிர, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் அக்டோபர் 9ஆம் தேதி அந்தமானை ஒட்டி உருவாகக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். மேலும் அக்டோபர் 10ஆம் தேதி மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும், அக்டோபர் 11ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வரை வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.