சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு இந்தியச் சட்டத்தில் இடமில்லை என்றும்; இதன் தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியச் சட்டத்தில் இடமில்லாத பட்சத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்;
"ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டினருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு அந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அதனடிப்படையில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக போட்ட ஒப்பந்தத்தின் படி அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம்: சட்டப்பேரவையில் மூன்றாம் நாளும் காரசார விவாதம்
இதேபோன்று இந்தியா - இலங்கைக்கு இடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பாக ஒப்பந்தம் போடப்படுமானால், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது சாத்தியமே" என விளக்கமளித்தார்.