ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 618 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Feb 23, 2022, 9:36 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 618 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 618 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 618 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 62 ஆயிரத்து 549 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 617 நபர்களுக்கும், ஓமன் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் என 618 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 47ஆயிரத்து 6 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 29 லட்சத்து 14 ஆயிரத்து 934 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 782 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று ஒரேநாளில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 2 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 98 ஆயிரத்து 231 என அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் ஒருவர், அரசு மருத்துவமனையில் மூன்று நபர்கள் என நான்கு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 993 என உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: கண் கலங்கிய நோயாளி வீடு தேடி மருந்துகளை எடுத்து சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. கரங்களைப் பற்றி ஆறுதல்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.