ETV Bharat / state

5 மாவட்டங்களுக்கு மழை: மக்களே உஷார்! - Chennai Meteorological Center

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu rain status  rain status  heavy rain  rain  மழை  கன மழை  தமிழ்நாட்டின் மழை நிலவரம்  சென்னையில் மழை  வானிலை அறிக்கை  சென்னை வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்  chennai news  chennai latest news  Chennai Meteorological Center  weather report
மழை
author img

By

Published : Aug 5, 2021, 2:35 PM IST

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, காரைக்கால், புதுக்கோட்டை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்

ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அரபிக்கடல்

ஆகஸ்ட் 7 முதல் 9ஆம் தேதி வரை மேற்கு, தென் மேற்கு, வடக்கு, மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா... திருப்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.