தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர். குறிப்பாக சென்னை தாம்பரம் பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வரும் வட மாநிலத்தவர்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த தமுமுக கட்சியினர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தாம்பரம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்கள் என ஒரு நாளைக்கு 9000 பேருக்குஉணவு வழங்கி வருகின்றனர். வறுமையில் வாடி வரும் பொதுமக்கள் அனைவருக்கும்10 கிலோ அரிசி அடங்கிய பையையும் வழங்கினர்.
இதையும் படிங்க: ’இயேசு போதித்த அன்பு வழியில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்’ - முதலமைச்சர் ஈஸ்டர் வாழ்த்து