ETV Bharat / state

தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்.. எதற்காக தெரியுமா? - TN Assembly

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை சட்ட முன்வடிவு குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்.. எதற்காக தெரியுமா?

author img

By

Published : Apr 22, 2023, 10:50 PM IST

சென்னை: நேற்று (ஏப்ரல் 21), தமிழ்நாடு சட்டப்பேரவையில் “2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் தமிழ்நாடு திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவின் உடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டத்தில் இருந்த தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம், எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்தத் திருத்தத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக் கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலை வாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தொழில் துறை அமைச்சரும் விரிவாக விளக்கம் அளித்தனர்.

இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருவதால், நாளை மறுநாள் (ஏப்ரல் 24) பிற்பகல் 3 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இதையும் படிங்க: 12 மணி நேர பணி குறித்த சட்டத்திருத்த மசோதா.. கம்யூனிஸ்ட்கள், விசிகவினர் வெளிநடப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.