இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், ”ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருவூலத் துறை அலுவலகங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் தவறுதல் மற்றும் கணக்கு விவரங்கள் ஆய்வு போன்ற நடவடிக்கைக்காக ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
ஓய்வூதியதாரா், குடும்ப ஓய்வூதியதாரா் உயிரிழப்புக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. இதனைத் தடுத்து, அந்தத் தொகையை அரசின் கணக்கில் வரவு வைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அதிகரிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!