ETV Bharat / state

கோவிட் 19 அச்சுறுத்தல்: 19.30 லட்சம் முகக்கவசங்கள் இருப்பு - chennai news

சென்னை: கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க, இருப்பில் 19 லட்சத்து 30 ஆயிரம் முகக்கவசங்கள் இருப்பதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

19.30 லட்சம் முக கவசங்கள் இருப்பு
19.30 லட்சம் முக கவசங்கள் இருப்பு
author img

By

Published : Mar 20, 2020, 1:44 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்வகையில், முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவங்களை அத்தியாவசியப் பொருள்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தப் பொருள்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதிசெய்யவும், அவை பதுக்கிவைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளது.

இவ்விவகாரத்தில் பிற மாநில அரசுகள் உத்தரவுகளைப் பிறப்பித்தபோதும், தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பாக அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் சோதிக்கப்பட்ட 222 பேரில் 166 பேருக்கு கொரோனா இல்லை எனவும், இரண்டு பேருக்கு அறிகுறி இருப்பதாகவும், 54 பேரின் மாதிரிகள் சோதனையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 19 லட்சத்து 30 ஆயிரம் முகக்கவசங்கள் இருப்பில் உள்ளன.

பள்ளிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 044-29510500/400, 9444340496, 8754448477, 104 ஆகிய கட்டணமில்லா தொலை்பேசி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எஃப்.எம். விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 89 ஆயிரத்தில் 780 பயணிகளில், இரண்டாயிரத்து 984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், சானிடைசருக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அதை நிறுத்திவைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவை கிடைப்பதை உறுதிசெய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன என்றும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த்பாண்டியன் முன்னிலையாகி, அதிகபட்ச விற்பனை விலையைவிட, கூடுதல் விலைக்கு விற்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும், அது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல்செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளிவைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால், தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இது தொடர்பாகவும் அரசு தரப்பு விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதித்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை வந்த 26 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கோவிட்-19 அறிகுறி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.