ETV Bharat / state

மத்தியில் 'ஆதார்' மாநிலத்தில் 'மக்கள் ஐடி' டிஜிட்டலை நோக்கி தமிழ்நாடு அரசு!

மத்திய அரசால் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் மக்கள் ஐடி என்ற 10 முதல் 12 இலக்க எண்கள் வழங்கப்பட உள்ளது.

மத்தியில் ‘ஆதார்’.. மாநிலத்தில் ‘மக்கள் ஐடி’.. டிஜிட்டலை நோக்கி தமிழ்நாடு அரசு!

author img

By

Published : Dec 27, 2022, 5:03 PM IST

சென்னை: நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ‘ஆதார் எண்’ வழங்கியுள்ளது. இதன் மூலம்தான் அரசின் திட்டங்களை பெறுவதில் இருந்து, பல தரப்பட்ட சேவைகளையும் பெற முடியும். இந்த நிலையில் இதேபோல் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு என தனியாக ’மக்கள் ஐடி' என்ற 10 முதல் 12 இலக்க எண்களை வழங்க உள்ளது.

இதனை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுத்து மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களை வயது, பாலினம் சமூக அடிப்படையில் கணக்கிட்டு, மக்கள் ஐடி எண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளி வந்துள்ளது. மேலும் இதற்கான தளத்தை நிர்வகிக்க திறமையும், அனுபவம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த மக்கள் ஐடி மூலம் தமிழ்நாட்டின் மக்கள் தொகையை துல்லியமாக கணக்கிடவும், அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.