சென்னை: தமிழ்நாட்டில் 44 காவல்துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 5) உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி வடக்கு மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன், ஆயுதப்படை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்பி நியமனம்
அதேபோல் கரூர் காவல் கண்காணிப்பாளராக சுந்தரவதனம், மதுரை காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக பாஸ்கரன், திருவாரூர் காவல் கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளராக பகேர்லா செபாஸ் கல்யாண், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன், மதுரை அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக வருண்குமார், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளராக தங்கராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போலீசாரால் தாக்கப்பட்ட Swiggy ஊழியரிடம் நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திரபாபு