ETV Bharat / state

சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு - தமிழ்நாடு அரசு தகவல்

author img

By

Published : Mar 16, 2022, 8:03 PM IST

தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, தமிழ்நாடு அரசுக்கு இரு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமை கருவேல மரங்கள்
சீமை கருவேல மரங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கடந்த விசாரணையின்போது பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வனப்பணிகள் (ஐ.எப்.எஸ்) அலுவலர்கள் அடங்கிய குழு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் ஆய்வு செய்யச்சென்ற குழு அறிக்கையை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

அந்த மாநிலங்களில், 50 ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம் சீமைக் கருவேல மரங்கள் இயந்திரங்களைக் கொண்டு அப்புறப்படுத்தப்படுவதாகவும், இரண்டு மூன்று ஆண்டுகள் அப்பகுதியை கண்காணித்து மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் வளராமல் பார்த்துக் கொள்வதாகவும், சீமைக்கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்களில் நாட்டு மரங்கள் நடப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

இதே நடைமுறையைப் பின்பற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், வனத்துறை அலுவலர்கள் குழு அளித்த அறிக்கைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசு இந்த விஷயத்தில் விரைந்து கொள்கை முடிவெடுக்கும் எனவும் அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். இதற்கிடையில், ஒப்பந்தங்கள் முடிந்த நிலையில் மரங்களை அகற்றும் நடவடிக்கையைத் தொடர அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இது பொதுப்பணித்துறையின் பணியைத் தடுக்கும் வகையில் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை மரங்களை அப்புறப்படுத்துவதைத் தொடரலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஆண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நீதிபதி: குற்றம்சாட்டி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.