”தமிழ்நாடு மக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005 மற்றும் அது தொடர்பான அரசாணைகளின் தொகுப்பு” ஆகியவற்றை அறிந்துகொள்ள ஏதுவாக அரசின் சார்பில் அவை புத்தகங்களாக விற்கப்படவுள்ளன என மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னதாக அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணா மேலாண்மை நிலையத்தில் நூறு ரூபாய் செலுத்தி நேரடியாக புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.
மேலும், தபால் அல்லது கூரியர் சேவை மூலம் புத்தகங்களைப் பெற விரும்புவோர், ANNA INSTITUTE OF MANAGEMENT, CHENNAI - 28 என்ற பெயரில் 136 ரூபாய்க்கு டிடி.யினை 'அண்ணா மேலாண்மை நிலையம், சென்னை - 28' என்ற முகவரிக்கு அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
என்ஐஏ, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்தங்களுக்கு வைகோ கண்டனம்!