இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும், தொழில்நுட்ப கல்வித்துறையின் கல்வி பாடத் திட்டத்திலும் வரக்கூடிய இணைப்புக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 20ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதுவரை 16 ஆயிரத்து 940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஆகஸ்ட் 4 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கேட்டு கொண்டதை ஏற்று பட்டைய படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் எனவும், சான்றிதழ் பதிவேற்றத்தினை ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என, அதில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.