சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர, இதர பணி நாட்களில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ஏற்கனவே நியாய விலைக் கடைகள் ஒவ்வொரு பணி நாட்களிலும் செயல்படும் வேலை நேரம் தொடர்பான விவரங்கள், 2018 மக்கள் சாசனத்தில் திருத்தங்கள் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், "சென்னை புறநகர் பகுதிகளில், காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நியாய விலைக் கடை செயல்பட வேலை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் பெரும்பாலன நியாய விலைக் கடைகளில் பின்பற்றப்படுவதில்லை என்றும், மாதாந்திர நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து தெரிவித்து, குறித்த நேரத்தில் நியாய விலைக் கடைகளை திறந்து செயல்படுத்த உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து நியாய விலைக் கடைகளிலும், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் நியாய விலைக் கடையின் தகவல் பலகையில் காட்சிபடுத்த வேண்டும். இதை சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து, குறித்த நேரத்தில் நியாய விலைக் கடைகள் திறந்து செயல்படுதகிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் : ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து