ETV Bharat / state

Online Rummy : ஆன்லைன் ரம்மி தடை மசோதா கடந்து வந்த பாதை - TN assembly news

ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இம்மசோதா இதுவரை கடந்து வந்த பாதையை காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 23, 2023, 2:53 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், சட்டப்பேரவையில் இம்மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா கடந்து வந்த பாதை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் விரிவாக குறிப்பிட்டிருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் நடைபெறும் மரணங்களை தடுக்கும் விதமாக புதிய சட்டம் இயற்றுவதற்காக தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையிலான இக்குழு 27-6-2022 அன்று அறிக்கையினை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கியது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவைக் குழுவின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

நீதியரசர் K. சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக் கல்வித் துறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலும், இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26-9-2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்டம், 2022, ஆளுநரால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் அரசிதழின் பகுதி IV, பிரிவு2-ல் அக்டோபர் 3, 2022-ல் வெளியிடப்பட்டது.

அதன்பிறகு, அவசரச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 என்று பெயர் சூட்டப்பட்டது.

தமிழ்நாடு சட்டமுன்வடிவு எண்.53/2022 என்ற இந்தச் சட்டமானது கடந்த 19-10-2022 அன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக 26-10-2022 அன்று சட்டத் துறையால் அனுப்பப்பட்டது.

இதற்கு ஆளுநர் 23-11-2022 அன்று சில விளக்கங்களைக் கேட்டிருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட அமைச்சர் ரகுபதி, 1-12-2022 அன்று ஆளுநரை நேரில் சந்தித்து மீண்டும் விளக்கம் அளித்தார்.

இதன் பின்னர் 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் 6-3-2023 அன்று மசோதாவை சபாநாயகருக்கு, ஆளுநர் திருப்பி அனுப்பினார். ஆளுநர் எழுப்பிய கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கும் கருத்துருவானது அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவானது சட்டப்பேரவை உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இம்மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.