ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகளுக்காக மாநில அரசு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: குடிமராமத்துப் பணிகளுக்காக மாநில அரசின் நிதியிலிருந்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

The state government has allocated Rs 500 crore for civilian work
author img

By

Published : Nov 12, 2019, 9:41 PM IST

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்ட இயக்குநர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை எந்திரங்கள் மூலம் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக மாநில அரசின் நிதியிலிருந்து 500 கோடி ரூபாயும், அவற்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதியாக 750 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டது.

மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், குடியிருப்புத் திட்டங்களான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுதல், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், இதர சாலைப் பணிகள் திட்டம் போன்ற பல்வேறு பணிகளிலுள்ள முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தெருவிளக்குகள் முறையாக எரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும், ஊராட்சியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை என்று புகார் வந்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஊரகப் பகுதிகளிலுள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக, 12,514 கிராம ஊராட்சிகள் அமைப்பினால் உலக இளைஞர் விளையாட்டு மையங்கள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அண்ட் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி, கூடுதல் இயக்குநர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், அனைத்து மாவட்டங்களின் செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

Intro:Body: https://we.tl/t-J9tiODsuEQ

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் நடைபெற்றது.
இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்ட இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் குடிமராத்து திட்டத்தின் கீழ் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை எந்திரங்கள் மூலம் தூர் வாரவும் கரைகளை பலப்படுத்தும் மாநில அரசின் நிதி ரூபாய் 500 கோடியும் அவற்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நிதியாக ரூபாய் 750 கோடி ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டது.
மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் , குடியிருப்பு திட்டங்களான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுதல் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதர சாலை பணிகள் திட்டம் போன்ற பல்வேறு பணிகளில் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தெருவிளக்குகள் 100%  எரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஊராட்சியில் உள்ள தெருக்களில் நல்ல முறையில் பராமரிக்கும் தெரு விளக்கு மட்டும் புரிந்து தொடர்பாக வரும் புகார் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக 12514 கிராம ஊராட்சிகள் அமைப்பினால் உலக இளைஞர் விளையாட்டு மையங்கள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு அண்ட் ராஜ் வர்மா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் டாக்டர் கே எஸ் பழனிசாமி மற்றும் கூடுதல் இயக்குனர்கள் கண்காணிப்பு பொறியாளர்கள் அனைத்து மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.