ETV Bharat / state

குரூப் 1 பணிக்கான பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 பணிக்கான பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 பணிக்கான பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்
குரூப் 1 பணிக்கான பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்
author img

By

Published : Jan 8, 2020, 2:31 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து வகையான தேர்வுகளுக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றி கடந்தாண்டு தேர்வாணையம் வெளியிட்டது. இந்தாண்டு குரூப்-1 பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குரூப்-1 தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கான பாடத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய புவியியல் அமைப்பு, இந்திய வரலாறு, கலாசாரம், இந்திய அரசியல் அமைப்பு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், மனத்திறன் சோதனை தேர்வு ஆகியவை கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்தது போல் இந்த ஆண்டும் இடம்பெற்றுள்ளன.

மேலும், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு கலாசாரத்தை நிலைநிறுத்தும் வகையிலும், அவற்றிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் திருக்குறள், சமூகப் பொருளாதாரம், திராவிட இயக்கங்களின் வரலாறு, தமிழ்நாட்டின் நிர்வாக அமைப்புகள் உள்ளிட்டவை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கறாராக லஞ்சம் கேட்கும் காணொலி வைரல்

Intro:குருப் 1 பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்

Body:சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 பணிக்கான பாடத்திட்டத்தில் தமிழக வரலாறு கலாச்சாரம் பண்பாடு இலக்கியம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து வகையான தேர்வுகளுக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றி கடந்தாண்டு வெளியிட்டது. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கான பாடத் திட்டங்கள் வகுத்து வெளியிடப்பட்டன.

இந்தாண்டு குரூப்-1 பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து குரூப்-1 தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் கான பாடத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முதன்மைத் தேர்விற்கு 10 பாடம் தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய புவியியல் அமைப்பு, இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம், இந்திய அரசியல் அமைப்பு, இந்திய பொருளாதாரம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், மனத்திறன் சோதனை தேர்வு ஆகியவை கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்தது போல் இந்த ஆண்டும் இடம்பெற்றுள்ளது. எட்டுப் பாடப்பிரிவுகளில் மேலும் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் அம்பேத்கார், பகத்சிங், பாரதியார் ,வ உ சிதம்பரனார் ,ஜவர்கலால் நேரு ,காமராஜர், மகாத்மாகாந்தி , மௌளானா கலாம் ஆசாத் தந்தை பெரியார் ,ராஜாஜி ,சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டவர்களின் பங்களிப்பும் இடம்பெற உள்ளது.

இவற்றிற்கு அனைத்திற்கும் மேலாக தமிழகத்தின் வரலாறு மற்றும் பண்பாடு கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் வகையிலும் அவற்றிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், திருக்குறள், சமூகப் பொருளாதாரம் ,திராவிட இயக்கங்களின் வரலாறு ,தமிழகத்தின் நிர்வாக அமைப்புகள் ,கல்வி ,சுகாதாரம், புவியியல் தோற்றம் உள்ளிட்டவைகள் விரிவாக கேட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே பாடத்திட்டங்களை திட்டமிட்டு அறிவித்துவிட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும் பணியிடங் களுக்கு உரிய அறிவிப்புகள் வரும்பொழுது அந்த கல்வித்தகுதி புதிய பாடத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் முதன்மை தேர்வில் எட்டு பாட தொகுப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டன. பொது பத்து படத்தொகுப்புகள் ஆக மாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.