சென்னை: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை திட்டத்துக்கு உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024 பொங்கலுக்கு வழங்கவுள்ள வேட்டி, சேலைத் திட்டத்திற்கு உத்தேச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்து வழங்கிடவும் ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும், வேட்டி, சேலையை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் வேட்டி, சேலைகளை வழங்கும் போது விரல் ரேகை பதிவு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிரிகளை வெல்ல சத்ரு சம்ஹார பூஜை:ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி வரை..பின்னணி என்ன?
எனவே, 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்க முதற்கட்டமாக தமிழக அரசு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் முதற்கட்டமாக, சேலைகள் மற்றும் வேட்டிகள் தயாரிப்பதற்காக கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணமாக இத்தொகையினை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அறுவடை திருநாளான பொங்கலுக்கு இலவச சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்க தமிழக அரசால் இவை வழங்கப்படும். மேலும் இதற்கான கணக்கெடுப்பு படிப்படியாக துவங்க உள்ளது.
இதையும் படிங்க: கனகசபையில் பொதுமக்கள் தரிசிப்பதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது? - உயர் நீதிமன்றம் கேள்வி