சென்னை: தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 56 மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது செஷல்ஸ் நாட்டு கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து பிடித்தனர். அதோடு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து படகு, மீன் வலைகளை பறிமுதல் செய்தனர்.
அதன்பின் 56 மீனவர்களையும் செஷல்ஸ் நாட்டிற்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் செஷல்ஸ் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுமென அவர்கள் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு வெளியுறவுத் துறை மூலமாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்.
இதன் மூலம் செஷல்ஸ் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 56 மீனவர்களையும் அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தூதரக அதிகாரிகள் 56 மீனர்வகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, 14 நாள்கள் தனிமைப்படுத்தினர்.
இதன் பின்பு மீனவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால் இந்திய தூதரக அதிகாரிகள் எமர்ஜென்ஸி சர்டிபிகேட் வழங்கி 29 மீனவர்களையும் இந்திய விமானப்படை தனி விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர். சென்னை வந்த 56 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு?