மூன்று அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு:
- 1998ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும்.
- 2008ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்க வேண்டும்.
- 2008ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களை கேங்மேன் பதவியில் தேர்வில்லாமல் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க துணை செயலாளர் நாகராஜ், ”மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 8000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.
இதன் பிறகும் அரசு கோரிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ’ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் உண்ணாவிரதமிருப்பேன்’ - காந்தியவாதி அறிவிப்பு