ETV Bharat / state

மீட்புப் பணிகளை பார்வையிட ஒடிசா சென்றது தமிழ்நாடு குழு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மீட்பு பணிகளை பார்வையிட இளைஞர் நலன் மற்றும் விளையாட்த்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் ஒடிசா வந்தடைந்தனர்.

மீட்பு பணிகளை பார்வையிட ஒடிசா சென்றது தமிழ்நாடு குழு!

author img

By

Published : Jun 3, 2023, 12:22 PM IST

Updated : Jun 3, 2023, 12:36 PM IST

சென்னை விமான நிலையத்தில் வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி

சென்னை: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சையில் 900 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மீட்புப் படையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், இந்த விபத்தில் தமிழர்கள் அதிகமாக பயணித்துள்ளனர் என்றும், அவர்கள் இந்த விபத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். மேலும், உடனடியாக உதவி மையம் எண் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசு உயர் அதிகாரிகள் பணீந்திர ரெட்டி, அர்ச்சனா பட்நாயக், அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட 5 அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்தை நேரடியாக பார்வையிட்டு தமிழர்களை மீட்டு அவர்களை சென்னை அழைத்து வர இன்று (ஜூன் 3) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புவனேஸ்வர் புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட உள்ளோம். நேரடியாக அங்கு சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு, இங்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளோம்.

ஒடிசா சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளி வரவில்லை. அவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இங்கு இருக்கின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஒடிசா முதலமைச்சரோடு தொடர்ச்சியாக பேசி வருகிறார். அங்கு சென்று பார்த்து விட்டு, அது குறித்த தகவலை வெளியிடுகிறேன்” என்றார். இதனைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகளை பார்வையிட ஒடிசா வந்து சேர்ந்துள்ளது தமிழ்நாடு குழு.

இதையும் படிங்க: Coromandel Express accident: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க அனுசரிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

Last Updated : Jun 3, 2023, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.