ETV Bharat / state

தமிழ்நாட்டில் கரோனா குறைவு... 2,014 பேருக்கு கரோனா உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,014 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 2014 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : Jul 23, 2022, 10:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2014 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (ஜூலை 23) புதிதாக 34 ஆயிரத்து 236 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆந்திர பிரதேசம், கேரளாவிலிருந்து வந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் 2014 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 66 லட்சத்து 94 ஆயிரத்து 774 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் 35 லட்சத்து 30 ஆயிரத்து 398 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மட்டும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 843 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 5ஆயிரத்து 394 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 2ஆயிரத்து 42 நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.