மக்கள் நல்வாழ்வு துறை ஜனவரி 3ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், " கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வதற்கு கூடுதலாக இரண்டு ஆய்வகங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மேலும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 60 ஆயிரத்து 743 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 864 நபர்களுக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று நபர்களுக்கும் என மொத்தம் 867 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 40 லட்சத்து 77 ஆயிரத்து 751 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 712 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை கண்டறிய முடிந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8 ஆயிரத்து 127 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து மேலும் ஆயிரத்து இரண்டு நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 429 என உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 6 நோயாளிகளும் என மேலும் 10 பேர் இன்று உயிரிந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதிவரை வந்த 2ஆயிரத்து 300 பயணிகளில் 2ஆயிரத்து 146 பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 24 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய 20 நபர்களுக்கு வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 2,26,234
- கோயம்புத்தூர் - 52,565
- செங்கல்பட்டு - 50,208
- திருவள்ளூர் -42,773
- சேலம் - 31,703
- காஞ்சிபுரம் - 28,794
- கடலூர்- 24,720
- மதுரை - 20,592
- வேலூர் - 20,283
- திருவண்ணாமலை - 19,181
- தேனி - 16,922
- தஞ்சாவூர் - 17,259
- திருப்பூர் - 17,170
- விருதுநகர் -16,385
- கன்னியாகுமரி -16,407
- தூத்துக்குடி -16,101
- ராணிப்பேட்டை - 15,935
- திருநெல்வேலி -15,328
- விழுப்புரம்- 15,035
- திருச்சிராப்பள்ளி - 14,248
- ஈரோடு மாவட்டம் - 13,795
- புதுக்கோட்டை - 11,425
- கள்ளக்குறிச்சி - 10,808
- திருவாரூர் -10,958
- நாமக்கல் -11,266
- திண்டுக்கல் - 10,989
- தென்காசி -8,285
- நாகப்பட்டினம் - 8,192
- நீலகிரி -7,976
- கிருஷ்ணகிரி-7,897
- திருப்பத்தூர்- 7,473
- சிவகங்கை - 6,546
- ராமநாதபுரம் -6,334
- தருமபுரி - 6,443
- கரூர் - 5,207
- அரியலூர் - 4,633
- பெரம்பலூர் -2,258
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்-930
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 1026
- ரயில் மூலம் வந்தவர்கள் -428
இதையும் படிங்க: உருமாறிய கரோனாவிற்கும் ஒரே தடுப்பூசிதான்- சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்